search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஏ முத்தரப்பு தொடர்"

    முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 87 ரன் வித்தியாசத்தில் விழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ். #ENGAvWIA
    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. சாம் ஹெய்ன் (145), கோலர்-காட்மோர் (67), முல்லேனே (58) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து லயன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.


    67 ரன்கள் அடித்த கோலர்-காட்மோர்

    பின்னர் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ களம் இறங்கியது. முகமது (52), ஆர். பொவேல் (55) ஆகியோரின் அரைசதத்தால் அந்த அணி 44.4 ஓவரில் 231 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து லயன்ஸ் முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தியா ‘ஏ’ அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு லெவன் அணியை எதிர்கொண்டது.

    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு லெவன் அணி டாஸ் வென்று வந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் பிரித்வி ஷா 70 ரன்னும், விஹாரி 38 ரன்னும், கேப்டன் ஷ்ரோயஸ் அய்யர் 54 ரன்னும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 50 ரன்னும், குருணால் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.



    பின்னர் 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு லெவன் அணி களம் இறங்கியது. இந்தியா ‘ஏ’ அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் அந்த அணி 36.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 203 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் சாஹர் 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி லெய்செஸ்டர்ஷைர் அணியை எதிர்கொள்கிறது.
    ×